- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய மன்ற சொற்பொழிவு நடந்தது.
- உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத் துறையின் நியூ ஐடோலா, இலக்கியமன்றத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவு "இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடு" என்ற தலைப்பில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துறைத்தலைவர் ஜான் சேகர் கலந்து கொண்டார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அறிவுசார் இயக்கமாக இருக்கிறது.
ஆங்கில இலக்கிய விமர்சனம் கிரேக்க, ரோமானிய தத்துவவா திகளான பிளட்டோ, அரிஸ்டாட்டில்,ஹோரேஸ் மற்றும் லஜ்ஜானியஸ் போன்ற வர்களின் கருத்துகளால் கட்டமைக்க ப்பட்டது. ஆங்கில இலக்கிய விமர்சனம் சிட்னி, ட்ரைடன், ஜான்சன், வோட்ஸ்வொர்த் மற்றும் கீட்ஸ் போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பால் வளர்ந்தது.
ஆங்கில இலக்கிய விமர்சன தந்தையாக கொண்டாடப்படும் மேத்யூ அர்னால்டு "தொடுகல் முறை" என்ற புதிய விமர்சன முறையை அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் புதிய விமர்சன கொள்கைகள் மேற்கு உலகில் பிரபலமானது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலவித விமர்சன கோட்பாடுகளான மனிதம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள், கட்டமைப்பு வாதம் மற்றும் பின் கட்டமைப்புவாதம் போன்ற கோட்பாடுகள் இலக்கிய உலகில் ஆளுமை செய்வதாக கூறினார்.
ஆங்கிலத் துறைத்த லைவர் பெமினா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஸ்வப்னா நன்றி கூறினார்.