நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் தலைவர் பதவி நீக்கம்
- நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் தலைவர் பதவி நீக்கப்பட்டார்.
- ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
விருதுநகர்
நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் அடிப்படையில் தலைவராக இருந்த பஞ்சவர்ணம் பதவியை இழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் மொத்தமுள்ள 14 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றனர்.
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பஞ்சவர்ணம் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். மற்றொரு சுயேட்சை தி.மு.க., அ.தி.மு.க. இருதரப்பிலும்இடங்கள் சரிசமமாக இருந்த நிலையில் குலுக்கல் முறையில் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவரானர்.
கடந்த 8 மாதங்களாக யூனியன் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முந்தைய 3 கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரதா உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பஞ்சவர்ணம் முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவருக்கு எதிராக அ.தி.மு.க. உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். ஆதரவாக ஒரேயொரு உறுப்பினர் மட்டுமே வாக்களித்தார்.
இதனால் பஞ்சவர்ணம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்.