உள்ளூர் செய்திகள்

ஆய்டியாபுரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த காட்சி. அருகில் ரகுராமன் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பாண்டியராஜ் உள்ளனர்.

புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2023-06-25 08:16 GMT   |   Update On 2023-06-25 08:16 GMT
  • அமைச்சர் புதிய கால்நடை மருந்தகங்களை திறந்து வைத்தார்.
  • துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி

விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் ரூ. 121.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரகுராமன் கலந்து கொண்டார்.

விழாவில் அமைச்சர் கூறியதாவது:-

நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும். அதற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் அதிக அளவில் கால்நடைகளை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் விதமாக வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி, ஆனைக்குட்டம், சிவகாசி வட்டம் ஆண்டியாபுரம், திருவில்லிபுத்தூர் வட்டம் நாச்சியார்பட்டி கிராமங்களில் தலா ரூ. 40.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 121.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News