உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இணையவழி பணி நிரவல் கலந்தாய்வு
- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இணையவழி பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது.
- பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும்.
விருதுநகர்
அரசு மேல்நி லைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் இணையவழி கலந்தாய்வு நாளை(11-ந்தேதி) நடக்கும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் 1.8.2022 நிலவரப்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 2பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கடிதம் மூலமாக அறிக்கை பெறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 3,123 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 407உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் அனுமதிக் கப்பட்டுள்ளன.
அரசாணையின்படி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 400மாணவர்களுக்கு மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை -1 பதவியில் ஆசிரியர்கள் பணியமர்த்த ப்படுகின்றனர். இது தவிர 183பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.
ஆனால் 400-க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் உள்ள 163பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான பள்ளிகளுக்கு பணி நிரவல்அடிப்படையில் பணியிட மாறுதல் செய்யப் படுவர்.
இதற்கான கலந்தாய்வு நாளை(செவ்வாய்க்கிழமை) இணைய வழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடு களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்யவேண்டும். எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் கலந்தாய்வு நடத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.