உள்ளூர் செய்திகள்

நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கம்

Published On 2022-11-11 07:39 GMT   |   Update On 2022-11-11 07:39 GMT
  • விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.

மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News