ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்
- விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
- அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர்.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவது, குடிநீர்-சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை பணிகளை செய்வது, புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12-ந் தேதி) முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கோரிக்கைக்காக தொடர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர். அப்போது தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் பாண்டியன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம், ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.