ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள்
- ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
- கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20 முகாம்கள் வீதம் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை கிராமத்தில் கலெக்டரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழு வினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.
நிகழ்ச்சி தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.
அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, கே.சி.சி. விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற் கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவச மாக தாதுஉப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்க ளிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்று களை விவசாயிகள் தங்க ளது பெயர்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணை யாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படும். எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வ லர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.