உள்ளூர் செய்திகள்

சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Published On 2023-07-26 07:43 GMT   |   Update On 2023-07-26 07:43 GMT
  • சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.

அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News