மாயமான 4 சிறுவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்
- மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.
அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.