பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடக்கம்
- ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர்.
- பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் ரேசன் கடைக்கு வர கலெக்டர் அறிவுறுத்தினார்.
விருதுநகர்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டு தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம், ஒரு முழுக்கரும்பு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற் கான டோக்கன் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 224 ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 6 லட்சத்து 242 பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப் பட்டது.
ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுக ளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 ரேசன் கார்டுதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை இப்பணி நடக்கும். வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டை தாரர் களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தகுதியுள்ள ரேசன் கார்டுதாரர்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி ரேசன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வலியுறுத்தி உள்ளார்.