உள்ளூர் செய்திகள்

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

Published On 2023-07-07 07:45 GMT   |   Update On 2023-07-07 07:45 GMT
  • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் மற்றும் அருப்புக் கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் இணைந்து காமராஜர் 121- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். நாடார்கள் உறவின் முறைபொருளாளர் செந்தூரான் வரவேற்றார்.

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை துணைத்தலைவர் முத்துக்குமார், காரியதரிசி முத்துசாமி , புரவலர் ராமர், எஸ்.பி.கே.கல்விக் குழும தலைவர் ஜெயக்குமார், நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் கனக ரத்தினம் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர்மணி முருகன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி கோபிநாத், இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், கல்லூரி செயலாளர் முத்து தினகரன், தொடக்கப் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், ஜூனியர் நர்சரி பள்ளி செயலாளர் ராஜசெல்வம், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின்பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள்பே ச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும் ஆறுதல் பரிசாக வழங்கினர்.

Tags:    

Similar News