பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி: ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
- பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி நடந்தது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர் - பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறை மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு இணைந்து 3 நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.
இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். முதல்வர் விஷ்ணுராம் துவக்க உரையாற்றினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கோவை என்த்து டெக்னாலஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் டெக்னிக்கல் லீட் முனைவர் கே.சுப்பிரமணியன் பங்கேற்றார். அவர் பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இணையதளத்தின் பயன்பாடுகளையும் இந்த துறையில் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளையும் எடுத்துரைத்தார் .
மேட் லேப் மென்பொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயல்முறை பயிற்சிகள் அளித்த அவர், அதில் உள்ள ஆராய்ச்சிக்கான தகவல்களையும் எடுத்துரைத்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பா
ளர்களான கார்த்திகேயன், தனம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.