இந்தியாவிலேயே முதல் முறையாக உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
- இந்தியாவிலேயே முதல் முறையாக உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
- அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைைம வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் மொத்தம் 2050 பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.
மகளிர் இலவச பஸ், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
குடும்பத்தை உயர்த்து வதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.