போக்குவரத்து அலுவலகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு
- போக்குவரத்து அலுவலகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது.
- இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
ராஜபாளையம்
தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக் ககூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில், ராஜபாளையத்தில் புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யானது.
இதைத்தொடர்ந்து அலுவலகம் தற்காலிமாக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் யூனியன் ஆபிஸ் எதிரே உள்ள கட்டிடத்தில் தொடங்க எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் போக்கு வரத்து துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜபாளையம் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வாடகைக்கு கட்டிடத்தில் தொடங்கப்பட்டு பின் அலுவலகத்திற்கென தனியாக புதியதாக சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர் இக்சாஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மாணவரணி நாகேஷ்வரன் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.