காளீஸ்வரி கல்லூரியில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு முகாம்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வளாக குறைதீர் அமைப்பு மாணவர் ஆலோசனை அமைப்பு பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அருபாதேவி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசுகையில், போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் நேர் வழியில் செயல்படுவது குறித்தும் எடுத்துக்கூறினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவமணி, ராஜேஸ்வரி, குடும்ப ஆலோசர் ஜோஸ்மின், குழந்தைகள் நல ஆர்வலர் முனியம்மாள், சமூக ஆர்வலர் ஜானகி, மருத்துவ ஆலோசகர் திருசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மாரி மகேஸ்வரி நன்றி கூறினார். இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.