உள்ளூர் செய்திகள்

கீழடிக்கு நிகராக அடுத்தடுத்து கிடைக்கும் தொல் பொருட்கள்

Published On 2023-06-07 08:22 GMT   |   Update On 2023-06-07 08:22 GMT
  • வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கீழடிக்கு நிகராக அடுத்தடுத்து கிடைக்கும் தொல் பொருட்களால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.
  • அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணா லான அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய காதணி கண்டெ டுக்க ப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அகழ்வாராய்ச்சியின் போது 2 கிராமில் தங்க பட்டையும், 2.2 கிராமில் அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டைய கால மனிதர்கள் கலை நயமிக்க தங்க அணிகலன்க ளை அணிந்து நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்து ள்ளது தெரிய வந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெ டுக்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன் கண்டெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. வெம்பக்கோட்டை அகழாய்வில் கீழடி அகழாய்விற்கு நிகராக அடுத்தடுத்து அறிய வகையிலான தொல் பொ ருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News