உள்ளூர் செய்திகள்

ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-06-27 08:24 GMT   |   Update On 2023-06-27 08:24 GMT
  • ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டு கள் பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற வைணவ கோவிலா கும். வைணவ - சைவ சமய வழிபாட்டிற்கு முன்னு தாரணமாக விளங்கும் இந்த கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில், சிவபெருமான் கருநெல்லிநாதர் சுவாமியாக அருள் பாலிக்கும் சிவன் கோவிலும் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும். மேலும் மலை உச்சியில் முருகப்பெருமான் கோவிலும் அமைந்துள்ளது.

இத்தனை சிறப்பு மிக்க இந்த கோவிலில், ஆனி பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. முன்னதாக ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் சுவாமி க்கும், ஸ்ரீசெங்க மலத்தாயார் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க ஆனி பிரமோற்சவ திருவிழா கொடி யேற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங் காரத்தில் எழுந்த ருளிய ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபய தாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News