உள்ளூர் செய்திகள்

உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-08-27 07:53 GMT   |   Update On 2023-08-27 07:53 GMT
  • அனைத்து மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
  • மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் மற்றும் மெல்ல கற்போர் கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மெல்ல கற்போர் மாணவர்களுக்கான கையேட்டினை அவர் வெளியிட்டார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம், வாயிலாக உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், உதவித்தொகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பொருளா தாரத்தில் பின்தங்கிய மாண வர்களை கண்டறிந்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News