உள்ளூர் செய்திகள்

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டம்

Published On 2023-11-10 07:15 GMT   |   Update On 2023-11-10 07:32 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் லட்சுமியாபுரம் -நுர்சாகிபுரம் இடையே ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

இந்த வழியாக நுர்சா கிபுரம், இடைய பொட்டல்பட்டி, அழகு தேவேந்திரபுரம், பாலசுப்பிரமணிய புரம், துலக்கன்குளம், கங்காகுளம், கண்ணார்பட்டி ஆகிய ஊர்களுக்கு பஸ், வாகனங்கள் சென்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக லட்சுமியாபுரம் ெரயில்வே சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் உள்ளது.இதனால் வாகனங்கள், பொதுமக்கள் சுரங்க பாதையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படு கின்றனர். இதனால் அங்கு தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற கோரி அந்த பகுதி பொதுமக்கள் நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் 6 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தண்ணீரில் சிக்கி அரசு பஸ் பழுதடைந்ததால், தண்ணீர் தேங்கி நிற்கும்போது பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.

வட்டாட்சியர் செந்தில் குமார், இன்ஸ் பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் இங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதனை கேட்டுக்கொண்ட அதிகாரி கள் தற்காலிகமாக மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தப் படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Tags:    

Similar News