உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2023-05-27 08:16 GMT   |   Update On 2023-05-27 08:16 GMT
  • கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
  • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூலாங்கால் கிராமத்ைத சேர்ந்த பைசல் என்பவருக்கும், விழா கமிட்டியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்லா(வயது24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

நிைலமை மோசமாகி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்ேபாது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பரளச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஏட்டு ராஜூ ஆகியோர் இருதரப்பினரை கண்டித்து சமரசமாக செல்லுமாறு எச்சரித்தனர்.

அப்போது சேக் அப்துல்லா மற்றும் 17 வயதுடைய நபர் சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Tags:    

Similar News