வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
- வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.