உள்ளூர் செய்திகள்

சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு

Published On 2023-09-01 08:19 GMT   |   Update On 2023-09-01 08:19 GMT
  • சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
  • மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

விருதுநகர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இதில் அமைச்சர் பேசிய தாவது:-

கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News