- ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.
இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த
200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.