- சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் மருத்துவர்கள் தினவிழா மற்றும் பட்டய கணக்காளர் தினவிழா, மரம்நடுவிழா என்ற முப்பெரும் விழாக்கள் நடந்தன.
பள்ளி சேர்மன் குமரேசன், மருத்துவர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். இண்ட்ராக்ட் கிளப் தலைவி வைஷ்ணவி வரவேற்றார்.
துளி பவுண்டேசன் துணைத் தலைவர் ஸ்ரீராம், நிலத்தடி நீர் சேமிப்பு பற்றி பேசினார். செல்வராஜ், முத்து,
சுப்பிரமணியன், அப்துல்காதர், முருகன், திருநாவுக்கரசு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கத்தலைவர் அங்குராஜ். செயலாளர் பால்சாமி, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தலைவர் வைமாதிருப்பதி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி சுதர்சனா மருத்துவர்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.
பள்ளி மாணவர்கள் ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இண்டர்கிளப் செயலாளர் மாணவி ஹரிணி நன்றி கூறினார். பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.