- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கோபாலபுரம், ராமகிருஷ்ணாபுரம், வைத்திலிங்காபுரம், மம்சாபுரம், ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடற்ற ஏழைகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வட்டாட்சியர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.