போதைப் பொருட்கள் தடுப்பு-ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போதைப் பொருட்கள் தடுப்பு-ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை கலை அரங்கத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகர், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து போதைப்பொ ருட்கள் ஒழிப்பு உறுதி மொழியினை அமைச்சர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சப்.கலெக்டர் (சிவகாசி) பிருத்திவிராஜ், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், முன்னாள் அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜா, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், சாத்தூர் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, அருப்புக்கோ ட்டை வருவாய் கோட்டா ட்சியர் கல்யாணகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.