உள்ளூர் செய்திகள்

பயிலரங்கில் பங்கேற்ற பிரமுகர்கள்.

காளீஸ்வரி கல்லூரி: மாணவர் தூதுவர் பயிற்சி திட்ட கருத்தரங்கு

Published On 2022-08-19 08:51 GMT   |   Update On 2022-08-19 08:51 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர் தூதுவர் பயிற்சி திட்ட கருத்தரங்கு நடைபெற்றது.
  • முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல்துறை சங்கப்பலகை இலக்கிய–மன்றமும், தமிழ்நாடு அரசின் தமிழ்வளா்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்கமும் இணைந்து "சொற்குவை" மாணவ தூதுவர் பயிற்சித் திட்டம்-2022 என்னும் தலைப்பிலான பயிலரங்கை நடத்தியது.

முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் விசயராகவன் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், "சொற்குவை என்பதற்கு சொல் குடுவை என்பது பொருள் ஆகும். சொற்குவை என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் முனைவர் பரஞ்சோதி ஆவார். ஒரு சொல்லிற்குப் பல பொருளும் பல–பொருளிற்கு ஒரு சொல்லும் உடைய மொழி தமிழ்மொழி ஆகும். அன்றாடம் பேசும் போது பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள். அதுவே தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் இயக்குநர் பசும்பொன் "மொழியில் சொற்பிறப்பு. கலைச்சொல்லாக்கம்" என்ற தலைப்பிலும், சென்னை. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப்பேராசிரியர் சுலோசனா "இலக்கியத்தில் கலைச்சொற்கள்''என்ற தலைப்பிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் ரேணுகாதேவி "அகராதியியலின் நோக்கும் போக்கும்'' என்ற தலைப்பிலும், தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா "மொழிபெயர்ப்புக்கலை" என்ற தலைப்பிலும், உதவிப்பேராசிரியர் பொற்கொடி ''கணினிததமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.

தமிழியல்துறைத் தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பல துறைகளைச் சேர்ந்த 210 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News