- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் மில் தொழிலாளி பலியானார்.
- வெள்ள பெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சுப்பா ராஜா மடம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). மில் தொழிலாளி. பாப்பு ராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). பாலாஜியும், வெங்கடேசும் நண்பர்கள் ஆவர்.
மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் மழை பெய்ததால் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கி ளில் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை பாலாஜி ஓட்டினார். வெங்கடேஷ் பின்னால் அமர்ந்து சென்றார். முடங்கியாறு ரோட்டில் ராஜூக்கள் கல்லூரி அருகே சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது.
இதனால் பாலாஜியும், வெங்கடேசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.
வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.