மயிலாடுதுறை குருபகவான் கோயிலுக்கு தென் கொரியா பேராசிரியர் வருகை
- தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.
- அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சேந்தங்குடியில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வர சுவாமி என்கின்ற வள்ளலார் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மேத்தா தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரில் குரு பகவான் கோயில் உள்ளது.
இங்கு தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.
அவர் தமிழ் கலாச்சா ரத்தின் மேல் பற்று கொண்டு இந்து மதத்தில் மாறி தமிழ் பெயரான திருஞானசம்பந்தர் என பெயர் மாற்றிக் கொண்டு அஸ்ட்ராலஜி படித்து ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார்.
நந்தி மேல் அமைந்து குருபகவான் காட்சி அளிப்பது இந்தியாவிலேயே வள்ளலார் கோயில் தான் என்பதை புரிந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பாடு செய்தனர்.
அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
இத்தலம் குருபகவானின் பரிகாரத்தலமாக விளங்கி வருவதால் வியாழன் தோறும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.