உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி சென்றாய பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம். 

சென்றாயப் பெருமாள் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம்

Published On 2023-03-11 09:29 GMT   |   Update On 2023-03-11 09:29 GMT
  • வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
  • இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரத்தில், 204 ஆண்டுகள் பழமையான பூதேவி, சீதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு ஆகமவிதிப்படி இலுப்பை மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் ரூ.25 லட்சம் செலவில் புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரோடும் வீதிகளில் வீடுகள் தோறும் தாம்பூலம், அவுள், கடலை, வெல்லத்தோடு, திருவீதி உலா வந்த சுவாமிக்கு படையல் வைத்தனர். மேலும் பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேர் வெள்ளோட்ட த்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Tags:    

Similar News