உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2022-11-24 09:52 GMT   |   Update On 2022-11-24 09:52 GMT
  • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.
  • மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.

மேலும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அருவியில் நீர்வரத்து குறைந்து அருவியில் சீராக தண்ணீர் விழுவதால் 18 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி அளித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News