உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கியுள்ள தண்ணீர்.

குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

Published On 2023-01-07 10:42 GMT   |   Update On 2023-01-07 10:42 GMT
  • உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது.
  • வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நீடாமங்கலம்:

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விளங்கி வருகிறது.

இத்திட்டத்தின்படி கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் வரை குழாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முக்கிய பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து இராட்சத மின்மோட்டார் மூலம் நீரேற்றி தினசரி பல லட்சம் லிட்டர் தண்ணீர் பல லட்சம் குடும்பங்களை சென்றடைந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருகருக்காவூர் பகுதியில் உள்ள நீரேற்றும் மையத்தில் இருந்து குழாய் மூலம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் சென்று வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் வலங்கைமானில் இருந்து பாபநாசம் செல்லும் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News