உள்ளூர் செய்திகள்

கார் சாகுபடிக்காக இன்று முதல் ராமநதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2022-07-25 09:15 GMT   |   Update On 2022-07-25 09:15 GMT
  • பாசனத்திற்காக ராமநதி அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • இன்று காலை அணையில் இருந்து இன்று முதல் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு தன்ணீர் திறக்கப்படுகிறது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை உள்ளது. மொத்தம் 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இன்று காலை நிலவரப்படி 81.50 அடி நீர் இருப்பு உள்ளது.

தண்ணீர் திறப்பு

அணை நிரம்புவதற்கு இன்னும் 2.50 அடி நீரே தேவை என்பதால் பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் பாசன கால்வாய்களான வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகியவற்றின் வழியாக நேரடி பாசன நிலங்களுக்கு கார் சாகுபடி செய்வதற்கு இன்று முதல் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு தன்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தினந்தோறும் வினாடிக்கு 60 கன அடி வீதம் 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் தென்காசி வட்டத்தில் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags:    

Similar News