உள்ளூர் செய்திகள்
காலரா போன்ற நோய் தொற்று பரவாமல் தடுக்க தண்ணீர் தொட்டிகள் ஆய்வு
- பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலம் சுகாதார துறை சார்பாக தண்ணீரை தொட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதாலும், காலரா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தண்ணீர் மூலமாக பரவும் நோய்களை தடுக்க மண்டல சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் ராட்சத தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நோய் பரவும் அபாயம் எதுவும் உள்ளதா, தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.