உள்ளூர் செய்திகள்

குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகை அரசு மகளிர் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Published On 2023-06-28 09:29 GMT   |   Update On 2023-06-28 09:29 GMT
  • பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
  • தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டது.

அதை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News