உள்ளூர் செய்திகள் (District)

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய உறுதியுடன் போராட வேண்டும்- அமைச்சர் பேச்சு

Published On 2023-08-26 09:56 GMT   |   Update On 2023-08-26 09:56 GMT
  • எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.
  • நுழைவு தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கலைஞர் கோட்டத்தின் அருகில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பனங்குடி குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா, திருவாருர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன.

இவற்றில் கட்சி எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.

இதனை மேடையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவுமில்லை விடவும் இல்லை.

அவருக்கு பின்னால் வந்த ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News