பொதுமக்களின் குறைகளை முழுமையாக தீர்த்து வைப்போம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
- டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
- அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வார்டு வாரியாக நேரடியாக சென்று குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்தார்.
இந்நிலையில் டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் நேரடி யாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
அதை பெற்றுக்கொண்டு அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை கொண்டு 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி யில் செயல்படுத்தாமல் பல பணிகளை முறைப் படுத்தாமல் இருந்ததை தற்போது முறைப்படுத்தி செய்து வருகிறோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை ஒவ்வொன்றாக முழுமையாக தீர்த்து வைப்போம் என்றார்.
இதில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், கடம்பூர் பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.