நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
- திருமண்டல உப-தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
- கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ஜாண்வெஸ்லி வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.
நாசரேத்:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில் செயல்படும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை நாசரேத் பேராலய தலைமைகுரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி தொடங்கி வைத்தார். கல்லூரி பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர். முதலாம்- ஆண்டு துறைத்தலைவர் சோபியா வேதபாடம் வசித்தார். கல்லூரி முதல்வர் கோவில்ராஜ் ஞானதாசன் வரவேற்று பேசினார்.
திருமண்டல உப-தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். திருமண்டல லே செயலரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் ராஜாசிங் ஹாரிஸ்டன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ஜாண்வெஸ்லி வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சாம்சன் மோசஸ், ஆசிரியர் பிரதிநிதி ஷெரீன், நாசரேத் சேகரகமிட்டி உறுப்பினர்கள் எபன், ஐசக், மர்காஷிஸ், ஜோனா, ஆசிரியர்கள், புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ஜான் வெலிங்டன், வினோத், ஜெசிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீகர்பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோவில்ராஜ் ஞானதாசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.