உள்ளூர் செய்திகள்

பயனாளிக்கு வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கிய போது எடுத்த படம். 

29 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்

Published On 2023-10-31 09:02 GMT   |   Update On 2023-10-31 09:02 GMT
  • இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.
  • ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.

மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,08,000 மதிப்பீட்டிலும் மற்றும் மாற்றுத்திறனாளியின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் பல்வேறு வட்டங்களை சார்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News