- கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது.
கடலூர்:
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் 5 -ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதி நோக்கி இரண்டாவது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளகாடானது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு மேல்ப ட்டாம்பாக்கம் திருவந்திபுரம் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழையால் மழையில் நனைந்தபடியும், குடைப்பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- தொழுதூர் - 9.0, பரங்கிப்பேட்டை - 2.0, சிதம்பரம் - 1.4, கடலூர் - 1.1, அண்ணாமலைநகர் - 1.0 என மொத்தம் - 14.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது