கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதிகளில் பரவலாக மழை
- சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
- மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லை.
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதியில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், மரக்கடை, குடிதாங்கிச்சேரி, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், பழையனூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பூந்தாழங்குடி, ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல், நீடாமங்கலம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் சம்பா, தாளடி பணிகளில் பம்பு செட் வசதி உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.