- அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- கருங்காடு பகுதியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேபோல் கன்னடியன் கால்வாய் பகுதி, வீரவநல்லூர், பத்தமடை, கூனியூர், சுத்தமல்லி, கொண்டா நகரம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.
பேட்டை அருகே உள்ள கருங்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக அங்கி ருந்த ஆயிரக் கணக்கான வாழைகள் சேதமடைந்தது.
இதே போல் தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி, அடவிநயினார் அணைப்பகுதி கள் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.
எனினும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து இல்லை. அந்த வகையில் 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம் 20 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 42.09 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.55 அடியாகவும் உள்ளது.