உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரி பகுதியில் புதருக்குள் மறைந்து நின்று தாக்கும் வனவிலங்குகள்- பொதுமக்கள் அச்சம்

Published On 2023-11-06 09:08 GMT   |   Update On 2023-11-06 09:08 GMT
  • புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வேண்டுகோள்
  • அயோடின் உப்பின் அளவு குறித்து ஆய்வு செய்யவும் கோரிக்கை

அரவேணு,

புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. பொருளாளர் மரியம்மா, துணைதலைவர் செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ஆண்டறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4-ஜி அலைகற்றை வசதி செய்து தரவேண்டும், மாவட்ட அளவில் உள்ள ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் உப்பில் அயோடின் அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும், கோத்தகிரி நகரில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை இந்த பகுதியில் உள்ள புதர்களில் மறைந்து நின்று தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே கோத்தகிரி பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

நிகழ்ச்சியில் இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், செய்தி தொடர்பாளர் முகமதுஇஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரசா, ரோஸ்லின், ராதிகா, யசோதா, செல்வி, விக்டோரியா, ஷாஜகான், லெனின்மார்க்ஸ், விபின்குமார், விஜயா, தமிழ்செல்வி, ஏசுராணி, பிரேம்செபாஸ்டியன், சதீஷ், கார்த்திக், ஞானபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் வினோபாபாப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News