விளாத்திகுளம் வட்டாரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை
- புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
- கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப்பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்ட வற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
காட்டுப்பன்றிகள்
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றி கள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர், கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலும் நாசம் செய்துள்ளதால் அது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து விவசாயி காசியம்மாள் என்பவர் கூறுகையில், இதுபற்றி வேளாண்மை துறை, வனத்துறை அதி காரிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை காட்டுப்பன்றிகள், மான்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
நிலத்தில் இறங்கி வேலை செய்து எனது இரு கால்களும் காயம்பட்டு உள்ளது. இந்தக் காயத்துக்கு மருந்தாக கூட இந்த நிலத்தில் விளைந்த கடலை விற்பனை விலை வராது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வளவு இன்னல்களிலும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறியல் போராட்டம்
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கூறுகையில், தமிழகத்தை போன்று இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இது போன்ற காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் தொல்லையால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அவதி அடைந்து வந்தபோது, அந்த மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்று வதற்காக உடனடியாக விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுத்துள்ளது.
காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விளாத்திகுளம் பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மறியல் போராட்டம் நடத்த உள் ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.