உள்ளூர் செய்திகள் (District)

ஊருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை... கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்

Published On 2023-05-27 09:24 GMT   |   Update On 2023-05-27 10:16 GMT
  • வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

கம்பம்:

கம்பம் நகருக்குள் இன்று காலை ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரிசிக்கொம்பன் யானை பிடிபடும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரிசிக்கொம்பன் யானையை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.

மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News