காவேரிப்பட்டணத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கப்படுமா?
- பிப்.6- இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர்.
- நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் தென்பெ ண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் வழியாகத்தான் காவேரிப்பட்டி னத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.
இதில் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்ததால் நெடுஞ்சாலை துறையால் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர். பின்பு நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
காவேரிப்பட்டினத்தில் வருகிற 18, 19 மாசி மாத அமாவாசை முன்னிட்டு அங்காளம்மன் பண்டிகை நடைபெறுகிறது. அப்பொழுது தென் பண்ணையாற்றில் பாலத்தின் மீது அம்மனுக்கு நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், மற்றும் அம்மன் தேர் வலையாகத்தான் வரும். அப்பொழுது பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள். எனவே உடனடியாக பாலத்தின் மீது உள்ள ரோட்டை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.