உள்ளூர் செய்திகள்

பழுதான கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்.

பழுதான கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Published On 2023-06-12 09:46 GMT   |   Update On 2023-06-12 09:46 GMT
  • பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
  • கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் கடந்த2017 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ மனைக்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

கால்நடை மருத்துவமனை திறந்து சில ஆண்டுகளிலியே கட்டிடத்தின்வெளி மற்றும் உட்பகுதியில் பல இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கட்டிடத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

அரசின் நிதிமூலம் கட்டபட்ட கட்டிடம் சில ஆண்டுகளிலேயே விரிசல்ஏற்பட்டு விரைவிலேயே கட்டிடம் இடிந்து விடும்அபாயத்தில் உள்ளது என இப்பகுதியினர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதான அந்த கட்டித்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News