திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்படுமா?
- மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து வளாகம் காணப்படுகின்றன.
- இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளார்கள். நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் நோயாளிகளும் வந்து செல்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள ஏழை கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி தான் உள்ளார்கள்.
திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த மருத்துவமனையை பிரதான மருத்துவமனையாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போதைய இந்த நிலையால் நோயாளிகள் நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நாள்தோறும் மழை நீர் சேற்றில் சிக்கி பலர் மற்றும் நோயாளிகள் வழுக்கி விழுவதாக அங்கு இருப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவமனை பிரதான கட்டிடம் பின்புறம் உள்நோயாளிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் கட்டிடம் அருகிலேயே உபயோகிப்பட்ட மருத்துவ கழிவுகள் உட்பட குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
அவை முறையாக அகற்றப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
பிரதான கட்டிடத்தில் இருந்து உள்நோயாளிகள் பிரிவிற்கும் உள்நோயாளிகள் கூட வரும் நபர்கள் தங்கும் கட்டத்திற்கு செல்லும் பாதையும் சேறும் சகதியுமாக நடக்கக்கூட முடியாத அளவிற்கு உள்ளது.
எனவே அரசு மருத்துவமனை அருகில் உள்ள சேற்றையும், அங்குள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.