உள்ளூர் செய்திகள்

சுள்ளான் ஆற்றில் படர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகள்.

சுள்ளான் ஆற்றில் படர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

Published On 2023-03-11 09:54 GMT   |   Update On 2023-03-11 09:54 GMT
  • வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • இதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு உள்ளது. சுள்ளான் ஆறு மூலம் பாபநாசம்` மற்றும் வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் தாலுக்காவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, செருமாக்கநல்லூர், அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம், கோடுகிளி, பொன்மான் மேய்ந்தநல்லூர், கோவிலாம்பூண்டி, கருப்பூர் மட்டையாண்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும் வடிகால் வசதி பெறுகின்றன.

தற்போது சுள்ளான் ஆற்றில் பாலூர், புரசக்குடியில் இருந்து வேம்பகுடி, அகரமாங்குடி வரையில் ஆற்றின் முழு பரப்பையும் வெங்காய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வாய்க்கால் முழுவதும் படர்ந்துள்ளது தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல வெங்காயதாமரை செடிகள் பெருந்தடையாக இருந்து வருகிறது. அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

அதுபோல கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது.விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பே சுள்ளான் ஆற்றில் பாலூர் முதல் அகரமாங்குடி வரையிலான வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காய தாமரை செடிகள் மற்றும் வெங்காய தாமரை பூண்டுகளை முழுமையாக அழித்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News