உள்ளூர் செய்திகள்

கணுவாய் பாளையம் பிரிவில் நிழற்குடை அமைக்கப்படுமா?

Published On 2023-02-18 09:44 GMT   |   Update On 2023-02-18 09:44 GMT
  • பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய் பாளையம் பிரிவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஏற்கனவே நிழற்குடை ஒன்று உள்ளது.

இதில் மர்ம நபர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்சுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சாலை ஓரங்களிலேயே நின்று பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

காரமடை-தோலம்பாளையம் சாலை தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் சாலையாகவும் இருப்பதால் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் சாலையோரங்களில் நின்று பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. விபத்துகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பணிக்கு செல்வோர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவும், பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News